![VJ Chitra Instagram Followers VJ Chitra Instagram Followers](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2020/06/VJ-Chitra-Instagram-Followers-696x467.jpg)
பாண்டியன் ஸ்டோர் சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய மைல்கல்லை தொட்டு உள்ளார்.
VJ Chitra Instagram Followers : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சித்ரா. ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தால் முல்லையை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமானது.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது குறித்து ஒரு பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சித்ரா. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
மேலும் அந்தப் பதிவில் ஹிட் மில்லியன் போலவர்ஸ் என் தங்கங்களே உங்களால் தான் இது சாத்தியம் ஆயிற்று.
இத்தனை நாட்களாக தாங்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் இதயம் கனிந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தான் நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோடுகளுக்கான ஷூட்டிங் தொடங்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.
அதேபோல் சமீபத்தில் தன்னுடைய ரசிகை ஒருவரை அலேக்காக தூக்கி அவருடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.