Viswasam Movie Updates

Viswasam Ticket : அடேய் உங்க அளப்பறைக்கு அளவே இல்லையாடா என பார்ப்போர்கள் வாயடைத்து போகும் அளவிற்கு அஜித் ரசிகரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் பல இடங்களில் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அஜித் ரசிகரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

புடிச்சு கட்டி போடுங்கடா.. அஜித் ரசிகர்களை வெறியேற்றிய வைரல் வீடியோ.!

எதோ ஒரு பகுதியில் உள்ள தியேட்டரில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருந்துள்ளது. இதனால் புக்கிங் தொடங்கியதும் முதல் ஆளாக டிக்கெட்டை புக் செய்ய அங்கேயே ரசிகர் ஒருவர் படுத்து உறங்கியுள்ளார்.

இதனை அஜித் ரசிகர் ஒருவர் வெறித்தனம் என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தமிழகத்தில் பல இடங்களில் ரசிகர்கள் விஸ்வாசம் டிக்கெட்டிற்காக தியேட்டர் வாசலில் காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் தூக்குதுரை அலப்பறை தான் அதிகம் – அட்டகாசமான தகவல்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.