Viswasam Video

Viswasam Video : வெளிநாட்டில் இப்படியொரு அஜித் வெறியனா? என தமிழ்நாட்டை சேர்ந்த அஜித் ரசிகர்களையே மிரள வைத்து வருகிறது வீடியோ ஒன்று.

தல அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள படம் விஸ்வாசம்.

இப்படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ஜனவரி 10-ம் தேதி முதல் விஸ்வாசம் படம் திரைக்கு வர உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் தரிசனத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டு ரசிகரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஸ்வாசம் ட்ரைலரை பார்த்து அந்த ரசிகர் தன்னுடைய ரியாக்ஷனை வெளிப்படுத்த இதனை பார்த்த ரசிகர்கள் இவன் நம்மள விட வெறித்தனமான ரசிகனாக இருக்கானே என அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.