Viswasam Release Date Poster

Viswasam Release Date Poster : பேட்டயுடன் மோதுவது உறுதி என்பது போல தற்போது விஸ்வாசம் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரிலீஸ் தேதி 10 என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் விஸ்வாசம் படம் கோலிவுட்டில் கிசுகிசுத்து வந்த படி வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

இதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரு தரப்பு ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த பொங்கல் போட்டியில் வெற்றி வாகையை சூட போவது தலையா? தலைவரா? அல்லது இருவருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.