Viswasam Climax

Viswasam Climax : விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் இன்டெர்வல் சீக்ரெட்டை பற்றி பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார் எடிட்டர் ரூபன்.

தமிழ் சினிமாவில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா, ரமேஷ் திலக் என மிக பெரிய பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் விஸ்வாசம்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்ய ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எடிட்டர் ரூபன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது

இயக்குனர் சிவா முதலில் ஒரு நிமிட டீஸர் தான் கேட்டிருந்தார். நான் தான் டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது என்பதால் ட்ரைலரை உருவாக்கினோம்.

பேட்ட எப்படி? – பிரபல நடிகரிடம் கேட்டறிந்த அஜித் – பேட்டியில் வெளியான உண்மை.!

ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் அனைத்தும் படத்தில் இருக்கும். இன்டெர்வல் காட்சி செம மாஸாக இருக்கும். நிச்சயம் ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுவார்கள்.

கிளைமேக்ஸ் காட்சிகளில் இடம் பெற்றுள்ள எமோஷனல் காட்சிகளை பார்த்து நான் மட்டுமல்ல படக்குழுவினர் பாதி பேர் அழுது விட்டனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தை பார்த்த தல அஜித் இதுவரை இயக்கிய 4 படங்களில் விஸ்வாசம் தான் பெஸ்ட் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் விஸ்வாசம் செம மாஸான குடும்பங்கள் கொண்டாட கூடிய படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதுவே இப்படியா? திருச்சியை அதிர வைத்த விஸ்வாசம் போஸ்டர் – வைரல் வீடியோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.