Rajini & Ajith

Rajini & Ajith : பேட்ட படம் குறித்தும் தலைவர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்தும் தல அஜித்தும் கேட்டறிந்ததாக பிரபலம் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படமும் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும் ஒரே நாளில் மோதி கொள்ள உள்ளன.

இதனால் தல மற்றும் தலைவர் ரசிகர்களிடையேயும் சமூக வளையதளங்களில் மோதல்கள் இருப்பதை அனைவராலும் பார்க்க முடிகிறது.

மேலும் பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர்களில் இடம் பெற்றிருந்த வசனங்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது போல அமைந்திருந்ததும் இந்த மோதல்களுக்கு காரணமாக அமைந்து விட்டது.

இந்நிலையில் தற்போது பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரண்டு படத்திலும் நடித்துள்ள ராமசந்திரன் துரைராஜ் என்பவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ட்ரைலர்களில் இவர்களுக்கு இடையே மோதல் என்பதெல்லாம் வெறும் பேச்சு தான்.

விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அஜித் சாருடன் பேசிய போதெல்லாம் அவர் ரஜினி சார் எப்படி இருக்காரு? பேட்ட படம் எப்படி போயிட்டு இருக்கு என்று நலம் விசாரிப்பார்.

இவர்களுக்குள் எந்தவித மோதலும் இல்லை. படங்கள் இரண்டும் ஒரே நாளில் ரிலீசாகின்றன அவ்வளவு தான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.