Viswasam Climax

Viswasam Climax : விஸ்வாசம் படத்தை பற்றி ஒரு தரமான பக்காவான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவல் நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

டி.இம்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. இது நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் காட்சியாக அமையும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது என்னவென்றால் விஸ்வாசம் படத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்த பெண் இப்படத்திலும் நடித்துள்ளார்.

கிளைமாக்சில் அவரை ஒரு கும்பல் கடத்த முயற்சி செய்யும் போது ஒரு சண்டை காட்சி உள்ளதாம். வீரம் படத்தில் இடம் பெற்றிருந்த ரயில் சண்டை காட்சியை போல இது இருக்கும் என கூறப்படுகிறது.

அப்போது இந்த சண்டை காட்சியில் தல அஜித் புல்லட் பைக்கில் மாஸாக வீலிங் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

வீரம் படத்தில் இடம் பெற்றிருந்த சண்டை காட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது போல இந்த படத்தின் சண்டை காட்சியும் கொண்டாடப்படும் என நம்பலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.