Viswasam Cast

Viswasam Cast : விஸ்வாசம் படத்தில் பல காமெடி நடிகர், நடிகைகள் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய மோஷன் போஸ்டர் எதிர்ப்பார்ப்பை பல மடங்காக அதிகரிக்க வைத்து விட்டது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பல காமெடி நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளதால் பொங்கலுக்கு இந்த படம் செம கிராமத்து விருந்தாக  அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ

1. தம்பி ராமையா
2. யோகி பாபு
3. ரோபோ ஷங்கர்
4. விவேக்
5. ரமேஷ் திலக்
6. ஜாங்கிரி மதுமிதா
7.கோவை சரளா

மெகா கூட்டணியுடன் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தை கொண்டாட நீங்க தயாரா ரசிகர்களே?