Viswasam Madurai Celebration

Viswasam Banner : அடேங்கப்பா.. தியேட்டர் ஹைட்டுக்கு பேனரா என பார்ப்போரை வாயடைக்க வைத்துள்ளனர் மதுரையை சேர்ந்த தல ரசிகர்கள்.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக், ரோபோ ஷங்கர், கோவை சரளா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

டீஸர், ட்ரைலர், சிங்கிள் டிராக்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் தற்போதில் இருந்தே படத்திற்கான கொண்டாட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

மதுரையை சேர்ந்த ரசிகர்கள் பிரபல தியேட்டர் ஒன்றில் தியேட்டர் ஹைட்டிற்கு பேனர் பேனர் தயார் செய்து வைத்துள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Viswasm Madurai Celebration

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.