விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பெயருடன் லால் சலாம் படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ஏராளமான பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். இவர் தற்போது கட்ட குஸ்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ள “லால் சலாம்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜூலை 17ஆம் தேதியான இன்று நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் திருநாவுக்கரசு என போஸ்டருடன் அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.