நான் அழுததற்கு காரணம் வரலட்சுமிதான்: விஷால் ஓபன் டாக்..
‘தான் கண்கலங்கியதற்கு வரலட்சுமி காரணமாக இருந்தார்’ என விஷால் கூறிய நிகழ்வு காண்போம்..
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், படம் வெற்றியடைந்துள்ளது.
படத்தில் ஆக்ஷன், கிளாமர், சென்ட்டிமென்ட், காதல், காமெடி என அனைத்துமே ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆதலால், குடும்பத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.
படத்தில், மனோபாலாவை வைத்து விஷாலும், சந்தானமும் அடித்த லூட்டிகளால் தியேட்டர்களில் கைத்தட்டல்கள் பறந்தன.
இதனால், பல திரையரங்குகளில் வேறு படங்களை தூக்கிவிட்டு, ‘மத கஜ ராஜா’ படத்தை திரையிட்டு வருகின்றனர். வசூல் ரீதியாகவும் படத்துக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், இப்படம் ஹிட்டானதை அடுத்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் விஷால், சுந்தர்.சி, அஞ்சலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஷால்,
‘வரலட்சுமி இத்தனை வருடங்களில் எனக்கு கிடைத்த அன்பான தோழி. ஃப்ரிட்ஜில் வைத்ததுபோல் அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார். ஒரே ஒரு படம்தான் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். ஆனால், கல்லூரியில் படித்த நண்பர்கள்போல் நாங்கள் பழகுவோம்.
நான் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால், எப்போதும் அழும் பழக்கம் மட்டும் என்னிடம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று, ‘எதையும் கடந்து சென்றுவிடலாம்’என்று எனக்கு நானே பேசி தைரியம் ஊட்டிக்கொள்வேன்.
ஆனால், முதன்முறையாக நான் கண் கலங்கியது என்றால் ‘ஹனுமன்’ படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சிக்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டலை பார்த்துதான்’ என்றார்.
