மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரித்து வருமா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று தகவலை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அதே நாளில் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.