சிறப்பு மருத்துவமனை முகாமில் விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணா கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

இவரின் நம்பிக்கைக்குரிய மனிதராகவும் விஷாலின் மேனேஜர் ஆகவும் இருந்து வருபவர் ஹரி கிருஷ்ணா.

இவர் தொடர்ந்து விஷால் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னை மதுரவாயலில் கவசம் அறக்கட்டளையும் மற்றும் அப்போலோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் மாண்புமிகு அமைச்சர் P.பென்ஜமின் அவர்கள் மற்றும் நடிகர் விஷால் மேலாளர் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 360க்கும் மேல் பொதுமக்கள் கலந்துக்கொண்டு பரிசோதனை செய்து பயனடைந்தனர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.