ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்டாக தளபதி 67 படம் பற்றிய தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் தளபதி விஜய் தற்போது தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. தளபதி 67 படத்தில் விஜயுடன் இணையும் முன்னணி தமிழ் நடிகர் - வெளியான ஷாக்கிங் அப்டேட்

தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்துடன் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் நேருக்கு நேராக மோத உள்ளது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மொத்தம் ஆறு வில்லன்கள் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. தளபதி 67 படத்தில் விஜயுடன் இணையும் முன்னணி தமிழ் நடிகர் - வெளியான ஷாக்கிங் அப்டேட்

கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், நிவின் பாலி உள்ளிட்டோர் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் நடிகர் விஷாலிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில் நடிகர் விஷாலும் நடிப்பது உறுதியானால் இது வேற லெவல் கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.