விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார்.

Vishal and Prabhu in New Movie : அறிமுக இயக்குனர் A.வினோத்குமார் என்பவர் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே #தாமிரபரணி, #ஆம்பள படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் இடம்பெற்ற விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

ஜெயிப்பது நிஜம் : ஜென் தத்துவம்

இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இணைந்து நடித்து வருகின்றனர். இதில் பிரபு சிறிது இளைத்து காணப்படுகிறார். விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.

என்னை யாரோ Prank பண்றான்னு நினைச்சுட்டேன்! – Actor Prankster Rahul Speech | Sivakumarin Sabadham

இப்படத்தை நடிகர்கள் ரமணா – நந்தா இணைந்து #ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். A.வினோத்குமார் டைரக்டராக அறிமுகமாகிறார். இசை : யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்.