விஷால் 34 திரைப்படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் ஒருவராக இருக்கும் நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷால் நடிக்க இருக்கும் 34 வது திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஹரி இயக்கத்தில் விஷால் தனது 34 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு விஷால் 34 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிக்க படக்குழு முதலில் நடிகை ஸ்ரீலீலா உடன் பேச்சு வார்த்தை நடத்தியது ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் தற்போது இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரியா பவானி சங்கர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.