தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் பாடலை நடிகர் சதீஷ் தமிழ் படம் 2 படத்தின் பாடலோடு இணைத்து ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் மேகம் கருக்குதா பாடலை.. தமிழ் படம் 2 படத்தின் பாடலோடு இணைத்து ரீல்ஸ் வீடியோ போட்ட நடிகர் சதீஷ் - வெளியான வீடியோ பதிவு.!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இப்படத்தில் இடம் பெற்று இருக்கும் மேகம் கருக்குதா! என்ற பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோ செய்து அசதி வருகின்றனர்.

தனுஷின் மேகம் கருக்குதா பாடலை.. தமிழ் படம் 2 படத்தின் பாடலோடு இணைத்து ரீல்ஸ் வீடியோ போட்ட நடிகர் சதீஷ் - வெளியான வீடியோ பதிவு.!

இந்நிலையில் அதேபோல் தற்போது பிரபல காமெடி நடிகரான சதீஷ் அவர் நடித்திருந்த தமிழ் படம் 2 படத்தின் பாடலை இந்த தனுஷின் மேகம் கருக்குதா என்ற பாடலுடன் இணைத்து ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அந்த காமெடியான ரில்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் பயங்கரமாக பரவி வருகிறது.