ரஜினியின் காவாலா பாடல் காபி தான் என்று நெட்டிசன்கள் வீடியோ ஒன்றை பரப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவத் தோற்றத்தில் நடித்து வரும் இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

பழமொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “காவாலா” என்னும் பாடல் சமீபத்தில் வெளியானது. தமன்னாவின் அசத்தலான நடனத்தில் ரஜினியின் அதிரடியான ஸ்டைலில் உருவாகியுள்ள இப்பாடல் தொடர்ந்து ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி இணையதளத்தை கலக்கி வரும் நிலையில் இப்பாடலும் காப்பி தான் என்று சர்ச்சை எழும்பியுள்ளது.

அதன்படி, அனிருத் இசையமைப்பில் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடல் எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறி வருவதோடு அப்பாடலின் வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.