ஈஸ்வரியை வைத்து பிளான் போட்டு பல்பு வாங்கியுள்ளார் கோபி. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி கூப்பிட்டுப் பார்க்க நானும் உன் கிட்ட சில விஷயங்கள் கேட்கணும் என்று ராமமூர்த்தி உடன் செல்கிறார். 

அதன் பிறகு ஈஸ்வரியிடம் உன் புள்ள இவ்வளவு பெரிய கேடுகெட்ட வேலை பண்ணி இருக்கான், அதைத் தெரிந்தும் நீ என்கிட்ட இருந்து அதை மறைத்தும் இருக்க என்ன சொல்லி கேட்க மத்தவங்க தான் அவ மேல கோவப்படுறான்னு நீங்களுமா அவ நம்ப பெத்த பையன் என்று ஈஸ்வரி பேச ராமமூர்த்தி கோபப்படுகிறார். அதன் பிறகு நீ இப்படியெல்லாம் பேசிகிட்டு இருந்தீங்க அவன் கூட கிளம்பி போன சொல்லிடுவேன் என்று சொல்ல நீங்க என்ன சொல்றது நான் போக தான் போறேன் என்று ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்கிறார். தாராளமா போ நீ போய் அங்கே இருந்து அனுபவிச்சாலும் உனக்கு இந்த வீட்டோட அருமையும் பாக்யாவோட அருமையும் புரியும் என பதிலடி கொடுக்கிறார். அப்போ நீங்க எப்படா இவ்வளவு அனுப்பலாம்னு தான் காத்துட்டு இருந்தீங்களா என்று கேள்வி கேட்க நீ ஒரு முடிவு எடுத்துட்டு அதுக்கு மத்தவங்கள சாடாத என்று கோபப்படுகிறார் ராமமூர்த்தி. 

அடுத்ததாக கோபி ராதிகா என இருவரும் பெட்டியோடு கீழே வர நாங்க வீட்டைவிட்டு கிளம்புறோம் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க நல்லா இருக்க வாழ்த்துக்கள் என்ன சொல்லி அம்மாவை கூப்பிட செழியன் பாட்டி உள்ள இருக்காங்க நீங்க போங்க நாங்க சொல்லிக்கிறோம் என்று சொல்ல திரும்ப கோபி அம்மாவை கூப்பிட எழில் எனக்கு புரிஞ்சு போச்சு இப்ப பாட்டி வந்து என் புள்ள என் கூட தான் இருப்பானு சொல்லுவாங்க அதானே உங்க பிளான் என்று பேச டேய் ஹீரோ கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்கிறார் கோபி. 

பிறகு ஈஸ்வரி பெட்டியுடன் வெளியே வர அதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனியா இது என்ன பாட்டி டாடியோட பெட்டியா என்று கேட்க கோபி அது டாடியோட பெட்டி இல்லடா பாட்டியோட பெட்டி அவங்களும் என்கூட வராங்க என்று சொல்ல எல்லோருக்கும் ஷாக் அதிகமாகிறது. பாட்டி நீங்க எதுக்கு போகணும் என்று செழியன் எழில் என எல்லோரும் பேச ஈஸ்வரி அமைதியாகவே நிற்கிறார். கோபி எங்க அம்மா யார் கூட இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும். என் கூட வந்து இருந்தா நீ ஒரே வார்த்தை கேட்டேன் என் மேல இருக்க பாசத்துல அவங்க வரேன்னு சொல்லிட்டாங்க என்று சொல்லி கோபி ஈஸ்வரியுடன் கிளம்ப ராமமூர்த்தி அவ போகட்டும் அமைதியா இருங்க என்று மற்றவர்களை அமைதியாக்குகிறார். 

அதன் பிறகு கோபி ராதிகா மற்றும் ஈஸ்வரி மூவரும் வீட்டை விட்டு வெளியே வரும் போது பாக்கியா எதிரே வர இனியா பாட்டு என் வீட்டை விட்டு போறதா சொல்றாங்க என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். கோபி அத்தை என்ன விட்டுப் போயிடாதீங்கன்னு கெஞ்சி அழு. நீ கெஞ்ச கெஞ்ச எங்கம்மா என்கூட வர்றத பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கும் என்று பேச பாக்யா எதுவும் பேசாமல் வழிவிட்டு நிற்க ஈஸ்வரி அதிர்ச்சியடைய கோபி பல்பு வாங்குகிறார். 

என் புள்ளைய விட்டு என்னால இருக்க முடியாது பாக்கியா என்று சொல்ல பாக்கியா நான் எதுவும் சொல்லலியே அத்தை என்று பதிலடி கொடுக்க அப்போ நான் எப்படா வெளியே போவேன்னு நீ காத்துகிட்டு தான் இருந்தியா என்று கேள்வி கேட்க ராமமூர்த்தி நீ ஒரு முடிவு எடுத்துட்டு பாக்யாவை பேசாதே என்று திட்டி போக சொல்கிறார். 

மறுபக்கம் முதலில் வீட்டுக்குள் ராதிகா நுழைய அதை பார்த்து அவரது அம்மா என்ன தனியா வந்து இருக்க மாப்பிள்ளை வரலையா என்று கேட்கிறார். பின்னாடியே கோபி வருவதை பார்த்து மயூ சந்தோஷப்படுகிறார். கையில் ரெண்டு பேக் உடன் வந்திருப்பதை பார்த்து கமலா குழப்பம் அடைய கோபி ஒன் மினிட் என்று சொல்லி ஈஸ்வரியை கூட்டி வர கமலா ஷாக் ஆகிறார். கமலாவும் ஈஸ்வரியும் ஒருத்தருக்கு ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.