பிரபல தயாரிப்பு நிறுவனத்தை தல அஜித்தை போல் எதிர்த்து பேசி மாஸ் காட்டியுள்ள தனுஷ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் இணைந்து அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

தற்போது இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்நிறுவனம் முதலில் இப்படத்தை தயாரிக்கும் பொழுது வேண்டா வெறுப்பாக தயாரித்து வெளியிட வேண்டும் என்ற கடமைக்கு வெளியிட்டார்களாம் அதற்கு காரணம் தனுஷ் மீது நம்பிக்கை இல்லை படம் தோல்வியைத் தழுவும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால் படம் வெற்றியடைந்து விட்டது.

தற்போது தனுசை சன் டிவி புரமோஷனுக்கு பேட்டி எடுக்க அணுகினார்கள். ஆனால் தனுஷ் வர மறுத்துவிட்டார். இந்த படத்தின் பிரமோஷன் தன் சொந்த செலவில் தனுஷ் செய்து கொண்டார். அப்போது சன் டிவி கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது வெற்றி அடைந்த உடன் கூப்பிட்டால் உடனே வந்து கலந்து கொள்ள வேண்டுமா என்று கடும் கோபத்தில் தனுஷ் கூறிவிட்டார். இது சன் டிவிக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோல் இந்நிறுவனத்தை எதிர்த்து சொல்வதைக் கேட்க முடியாது நீங்கள் சொல்லும் இடத்திற்கு வர முடியாது என்று சொன்ன முதல் ஆள் அஜித் குமார். அதன் பின்னர் யாரும் இவர்களை எதிர்க்கவில்லை தற்போது தனுஷ் எதிர்த்து பேசி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவர்கள் இப்போதுதான் நீங்கள் ரியல் ஹீரோ என்று தனுஷை பாராட்டியும் வருகின்றனர். தற்போது இந்த தகவல் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.