ஐஸ்வர்யா ராயுடன் விளையாடும் வீடியோவை விக்ரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சீயான் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தியிருந்த நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் -2′ படத்தின் புரோமோஷனின் போது ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களால் கமெண்ட்களை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.