சியான் 60 படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Vikram and Druv Character in Chiyaan60 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர்களை கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் சியான் 60. இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் 29 நாள் நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு

இந்த படத்தில் விக்ரம் மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து துருவ் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

சியான் 60 படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் கதாபாத்திரம் என்ன? டைட்டில் என்ன வெளியான அதிரடித் தகவல்கள்.!

மேலும் தற்போது இந்த படத்தில் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடைய அப்பா விக்ரம் கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் ஆகஸ்ட் 15 அல்லது 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைக்கிறது.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்! 

இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே நேப்பாளம் பார்டர் பகுதியில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் சியான் 60 படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து விடும் என தகவல் கிடைத்துள்ளது.