Web Ads

விக்ரம் 63 படத்தின் இயக்குனர் யார்? டைட்டில் என்ன தெரியுமா? முழு விவரம் இதோ..!

Web Ad 2

விக்ரம் 63 படத்தின் இயக்குனர் மற்றும் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

vikram 63 movie title and director update
vikram 63 movie title and director update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

அதனைத் தொடர்ந்து விக்ரம் 63 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தை இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு “வீரமே ஜெயம்” என்ற டைட்டில் வைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் வருகிற மே மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

vikram 63 movie title and director update
vikram 63 movie title and director update