Pushpa 2

பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளி மகாராஜா படைத்த சாதனை.. முழு விவரம் இதோ..!

பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளி மகாராஜா திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

vijaysethupathi in maharaja movie beat bahubali 2

vijaysethupathi in maharaja movie beat bahubali 2

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. குறைந்தபட்ச பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம்.ஏற்கனவே உலக அளவில் 110 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில் தற்போது சீனாவில் மட்டும் 95 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்கனவே பாகுபலி 2 திரைப்படம் சீனாவில் என்பது கோடி மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தை பின்னுக்கு தள்ளி மகாராஜா சாதனை படைத்துள்ளது. விரைவில் இந்த திரைப்படம் 100 கோடியை எட்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சமீபத்தில் படக்குழு இயக்குனருக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

vijaysethupathi in maharaja movie beat bahubali 2

vijaysethupathi in maharaja movie beat bahubali 2