நாம பேசக்கூடாது, படம்தான் பேசணும், அதான் புரோமோஷன்: மோகன் லால் கருத்து..
மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ படம், மற்றும் பிரித்விராஜ் இயக்கம் குறித்தும் அவர் தெரிவித்ததாவது:
நடிகர் மோகன்லால் முதல் முறையாக ‘பரோஸ்’ என்ற படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கிறார். இப்படம், வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீசாகவுள்ளது. இது குறித்து பல சுவாரசியமான நினைவுகளை புன்னகையோடு பகிர்ந்து வருகிறார்.
அவ்வகையில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எம்புரான்’ படத்தில் நடித்தது குறித்தும உற்சாகமாய் பகிர்ந்துள்ளார். முன்னதாக, இந்தக் கூட்டணி ‘ப்ரோ டாடி’ என்ற படத்தில் காமெடி ஜானரில் இணைந்து நடித்திருந்தது.
நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் குறித்து மோகன்லால் கூறும்போது, ‘பிரித்விராஜ் மிகவும் ஆச்சர்யமான இயக்குநர். அவருக்கு கேமரா உள்ளிட்ட பல விஷயங்கள் அதிகம் தெரியும். அவரை அவ்வளவு எளிதில் திருப்திபடுத்திவிட முடியாது. தனக்கு தேவையான ரிசல்ட் கிடைக்கும்வரை தொடர்ந்து வேலை வாங்கிக்கொண்டே இருப்பார்.
குறிப்பாக, தனது இயக்கத்தில் உருவாகும் படங்களை அவர் தோல்வியடைய விடுவதில்லை’ என பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன்லால் தெரிவிக்கையில், ‘அடுத்ததாக ‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளேன். எனது இயக்கத்தில் வெளிவரும் ‘பரோஸ்’ படம் எப்படியென்றால், ‘என்னுடைய படம் குறித்து, நானே பெரிதாக பேசுவதைக் காட்டிலும் எனது படம் பேசுவதுதான் சிறப்பாக இருக்கும்’ என கூறி சிரித்தார்.
இதற்கு, நெட்டிசன்கள் ‘ஏன் சார்.. படம் நெருப்பு மாதிரி இருக்கும்னு’ நிறைய அவிழ்த்து விடலாம்ல.! ‘ என குறும்பாக கேட்டு வருகின்றனர்.