Vijayalakshmi

Vijayalakshmi : கை, கால் நல்லா தானே இருக்கு, உழைத்து சாப்பிட முடியாது என விஜய் பட நடிகை விஜயலட்சுமியை கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் விளாசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் சில படங்களிலும் சில சீரியல்களிலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் உடல்நல குறைபாடு காரணமாக பெங்களூரு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு கூட பணமில்லை என கூறி திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்டார்.

மேலும் இவர் வீடியோ ஒன்றின் மூலம் கன்னட நடிகர்களான சிவராஜ் குமார் மற்றும் புனித ராஜ் ஆகியோர் எனக்கு உதவவில்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில் மைசூரில் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் குமாரிடம் இது குறித்து கேட்டதற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்மனதில் இருந்து வர வேண்டும்.

கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் கடுமையாக உழைக்கிறார்கள். உங்களுக்கு நல்ல கை, கால், மனநிலை உள்ளது. அப்புறம் எதற்கு உதவி? யார் யாருக்கு என்னனென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆண்டவன் பார்த்து கொள்வான்.

உடல் நிலை சரியில்லை என கூறி மருத்துவமனையில் சேர்ந்த விஜயலக்ஷ்மி எப்படி அடிக்கடி சமூக வளையதளங்களில் பதிவுகளை பதிவு செய்து வருகிறார் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Sivaraj Kumar
Sivaraj Kumar
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.