சிவாஜி படத்தை அப்படியே காப்பி அடித்துள்ளது விஜய் டிவி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் சிப்பு சூர்யன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாரதி கண்ணம்மாவிடம் தன்னை வேண்டாம் என நிராகரிக்க காரணம் கேட்க கண்ணம்மா என் கலர் என்ன? உன் கலர் என்ன? என்று கலர் பற்றி பேசிய விஷயத்தை பார்த்த ரசிகர்கள் இது அப்படியே சிவாஜி படம் காட்சியாச்சே என கலாய்த்து வருகின்றனர்.
இதுக்கு முதல் பாகம் எவ்வளவோ பரவாயில்லை எனவும் கிண்டல் அடிக்கின்றனர்.