தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியல் நடித்து பிரபலமானவர் வைஷாலி.
இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் தாண்டி இவருக்கு காதல் திருமணம் நடைபெற்றது.
இப்படியான நிலையில் விபத்து ஒன்றில் சிக்கியது குறித்து பேசி உள்ளார் வைஷாலி. தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் போது விபத்தில் சிக்கியதாக கூறியுள்ளார்.
சீட் பெல்ட் போட்டிருந்ததால் உயிர் தப்பித்ததாகவும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.