பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி கூறி தளபதி விஜய் கைப்பட எழுதிய கடிதம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay Thanks to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கம் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

தளபதி விஜய் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர். இந்த நிலையில் தற்போது தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தளபதி விஜய் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் இது இப்போது எழுதப்பட்ட கடிதம் இல்லை பல வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒன்று எனவும் கூறப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.