விஜய் கையில் இருக்கும் பேண்டை போலவே தானும் ஒரு பேண்ட் அணிந்துள்ளார் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.

Vijay Son Sanjay in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

விஜய் கையில் இருக்கும் அதே பேண்ட்.. அப்பாவுக்கு தப்பாத பிள்ளை - இணையத்தில் வைரலாகும் தளபதி விஜய் மகன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம்

இவரைத் தொடர்ந்து குட்டி தளபதியாக இவருடைய மகன் வெகுவிரைவில் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே சஞ்சய் விஜயுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இவர் தற்போது வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப் படிப்பை பயின்று வருகிறார். வெகு விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோவாகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அது தளபதி விஜய் கையில் அணிந்திருக்கும் பேண்டைப் போலவே சஞ்சயும் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாவுக்கு தப்பாத பிள்ளை குட்டி தளபதி என கொண்டாடி வருகின்றனர்.