மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi Salary to Master Chef : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சன் டிவி இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிலவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமையல் நிகழ்ச்சியை காமெடியாகவும் கொண்டு செல்ல முடியும் என்பதை விஜய் டிவி நிரூபணம் செய்தது.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் மாஸ்டர் செஃப் தமிழ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மூன்று பேர் நடுவராக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தெலுங்குவில் இதே நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார்.

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி.!

மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி பல கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட இந்த நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன Compare பண்ணாதீங்க.., கடுப்பான Ramya Krishnan | Viral Fight | Trending News | Kalakkalcinema HD