கமலுக்கு வில்லனாக நடிக்க ரூபாய் 10 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் பிரபல முன்னணி நடிகர் ஒருவர்.

Vijay Sethupathi Salary for Vikram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மானகரம் கைது என இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த இவர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.

அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் கமலுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கமலுக்கு வில்லனாக நடிக்க ரூபாய் 10 கோடி சம்பளம் கேட்கும் முன்னணி நடிகர்? - அதிர்ச்சியில் படக்குழு

அதன் பின்னர் கமலுக்கு விதமாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதுவரை இந்த தகவல் குறித்து ராகவா லாரன்ஸ் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டஜன் கணக்கில் படங்களில் கமிட் ஆகி இருப்பதால் மற்ற படங்களில் நடிக்கும்போது கால்சீட் கேட்க கூடாது. ரூபாய் 10 கோடி சம்பளமாக வேண்டும் என அடுக்கடுக்கான கண்டிஷன்களை விஜய் சேதுபதி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் தான் தெரியும்.