Vijay Sethupathi Salary for Telugu Movie

விஜய் சேதுபதியின் சம்பளத்தை கேட்டு தெறித்து ஓடியுள்ளார் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன்.

Vijay Sethupathi Salary for Telugu Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் விக்ரம் வேதா, மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இவருக்கு தெலுங்குவிலும் மார்க்கெட் உச்சத்தை அடைந்துள்ளது. தெலுங்குவில் உப்பென்னா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கொடூர மனிதனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார் விஜய் சேதுபதி. இதனால் அல்லு அர்ஜுன் தான் நடிக்கும் புஷ்பா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

ஆனால் விஜய் சேதுபதி ரூபாய் 20 கோடி சம்பளம் கேட்க அல்லு அர்ஜுன் மிரண்டு போயுள்ளார். இதனால் விஜய் சேதுபதிக்கு பதிலாக பகத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.