Vijay Sethupathi New Film title
Vijay Sethupathi New Film title

Vijay Sethupathi New Film title – சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி? குவியும் நட்சத்திரங்கள்!

இவரது திரை பயணம் தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி மலையாளத்திற்கும் செல்கிறது.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக தற்போது இன்னொரு தெலுங்கு படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதி பாட்டுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடிய பிராவோ – வைரலாகும் வீடியோ உள்ளே!

சிரஞ்சீவியின் உறவினர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு ஜலரி என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.