Vijay Sethupathi Fans Club Complaint
Vijay Sethupathi Fans Club Complaint

இந்து கடவுள் குறித்த பேச்சால் விஜய் சேதுபதிக்கு எதிரான கண்டனங்களும் விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Vijay Sethupathi Fans Club Complaint : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி சமீபகாலமாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதுவும் கடவுள் குறித்த இவர் பேசிய பேச்சுகளை இவருக்கு ஆப்பாக அமைந்து வருகின்றன.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே சன் டிவியில் இவர் தொகுத்து வழங்கி நிகழ்ச்சியில் கடவுளின் அபிஷேகம் குறித்து பேசிய பேச்சு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதனால் இந்து அமைப்புகள் நெட்டிசன்கள் என பலரும் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்களை கூறி வருவது மட்டுமல்லாமல் பல இடங்களில் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறு பேசிய விஜய் சேதுபதியை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையே தரக்குறைவாக பேசி விமர்சித்து வருகின்றனர்.

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்.. ஆனால்- இயக்குனர்கள் மீது டிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார், தொகுப்பாளரிடம் வாக்குவாதம் ( வீடியோவுடன் இதோ )

இதனால் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் விஜய் சேதுபதியை விமர்சிப்பது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையே தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரைப்பற்றிய தரக்குறைவான பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் அதனைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி பேசியதை சமூக விரோதிகள் தவறாக எடிட் செய்து சித்தரித்து அவரை சர்ச்சைக்கு உள்ளாகி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.