Viswasam Review

Vijay Milton : தல ஜென்டில் மேன், இதுக்காகவே விஸ்வாசம் படம் ஓடணும் வெற்றி பெறணும் என பிரபல தியேட்டர் ட்வீட் செய்துள்ளார்.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வாசம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ 15.21 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் ரூ 88 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்தது.

விஸ்வாசம் பட்ஜெட், அஜித், நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

படத்தை பற்றி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பிரபல இயக்குனரான விஜய் மில்டன் ட்விட்டர் பக்கத்தில் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு நடிகர் படம் ஒன்றில் நடித்து விட்டு உங்களது இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறுவார்கள்.

ஆனால் படம் ரிலீஸானதும் அந்த கருத்து மாறி விடும். ஆனால் தல அஜித் விவேகம் படத்தின் போது சிவாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார்.

அதற்காகவே விஸ்வாசம் படம் நன்றாக ஓட வேண்டும். வெற்றிபெற வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.