விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து, எடிட்டர் விமர்சனம்; வைரல்..

Web Ads

தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ குறித்து படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ் கூறிய தகவல்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தற்போது வைரலாகி வருகின்றது. படம் எப்படி என்பது குறித்து அவர் தெரிவிக்கையில்,

‘ஜன நாயகன்’ பற்றி ஏதாவது சொன்னால், படத்திலிருந்து என்னை நீக்கிவிடுவார்கள், ஆனால, சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கொரு நேரம் வரவேண்டும்.

ஆனால் ‘ஜன நாயகன்’ சூப்பராக வந்துள்ளது. 100 சதவீதம் ‘விஜய்யிஸம்’ படத்தில் உள்ளது. அதற்கான பல கூறுகள் படத்தில் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். அவர் சொற்படி இப்படம் கன்ஃபார்ம் ரசிகர்களுக்கு செம் ட்ரீட் ஆக அமையும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா நடித்துள்ளனர். மேலும் தளபதி விஜய்யின் விருப்பமான இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் ஆகியோரும் ‘ஜன நாயகன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது.

வசூலில் 1000 கோடியை எட்டி, சினிமாவில் இருந்து விஜய் விடைபெற ‘ஜன நாயகன்’ உதவுமா என்ற கேள்விக்கு விடை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் ஹெச். வினோத் அனைத்து விதமான உணர்ச்சிகளுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘தி கோட்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. ‘தி கோட்’ உலகளவில் 456 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது நினைவுகூரத்தக்கது.

vijay last movie jana nayagan first review out
vijay last movie jana nayagan first review out