ஜவான் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ஷாருக்கான்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று படங்களை இயக்கியதைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வர தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க போவதாக தகவல்கள் பரவின.

இப்படியான நிலையில் தற்போது தளபதி விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பைக்கு பறந்துள்ளார். அங்கே ஷாருக்கான் உடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது.

ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் பற்றி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.