Web Ads

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் செம வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ முதல் பாடல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது.

இதனையடுத்து ‘ஜனநாயகன்’ படத்துடைய முதல் பாடல் நாளை சனிக்கிழமை 8-ந்தேதி தேதி முதல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையில், இப்படத்துடைய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் மக்களுக்கு இடையில் முறுக்கு மீசை மற்றும் கண்ணாடியுடன் மிரட்டலான லுக்கில் விஜய் இருக்கிறார். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா, வெளியாகாதா என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் வரும் ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனிடையில் நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விஜய் பாடியுள்ள பாடல் என கூறப்படுகிறது. விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடும் வழக்கமுடையர். அவ்வகையில், ‘ஜனநாயகன்’ படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இதனுடைய லிரிக்கல் வீடியோ வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன், பிரியாமணி, மோனிஷா பிளஸ்ஸி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர். படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கு ‘தளபதி வெற்றிக்கொண்டான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

vijay in jananayagan movie new poster viral
vijay in jananayagan movie new poster viral