Web Ads

ஸ்ரீ காந்த்-ஷாம் நடிப்பில் உருவான ‘தி டிரெய்னர்’ படத்தின் கதை..

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெய்ன்’ என்பது தெரிந்ததே. இவ்வகையில் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்..

ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

டிரான்ஸ் இந்தியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நீலா தயாரிக்கிறார். பி.வேல்மாணிக்கம் இயக்கியுள்ள இப்படத்துக்கு அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

‘பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு போலீஸார் உருவாக்கிய ‘காவலன்’ செயலியில் இருந்து உத்வேகம் பெற்று சமூகத்துக்குத் தேவையான படமாக இது உருவாகியுள்ளது. நடிகர் ஸ்ரீ காந்த், நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் ‘லீ’ என்ற நாயும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.

ஜூனியர் எம்.ஜி.ஆர், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய செல்வாக்கின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபடும் மர்ம கும்பலைச் சுற்றிக் கதை சுழல்கிறது. போலீஸ் அதிகாரி ஷாம், ஸ்ரீ காந்தை குற்றவாளி என்று தவறாக நினைக்கிறார். தன்னை நிரூபிக்க அவர் என்ன செய்கிறார் என்பது கதை’ என கதைக்களம் பற்றித் தெரிவித்துள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

the trainer film based on kavalan mobile application
the trainer film based on kavalan mobile application