தளபதி 65 படத்தில் இருந்து விலகினாரா முருகதாஸ்? - வெளியான லேட்டஸ்ட் அப்டேட் | Thalapathy Vijay

Vijay Decision on Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அதிரடி மாற்றம் ஒன்று நடந்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது படத்தின் முதல் பாதி கதையை மட்டும் முருகதாஸ் விஜயிடம் கூறியிருந்தார் அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது என ஏற்கனவே தகவல் கிடைத்தது.

தளபதி 65 படத்தில் இருந்து விலகினாரா முருகதாஸ்? - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

இதனையடுத்து தற்போது இரண்டாம் பாதி கதையை கேட்ட விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். கதையில் மாற்றம் செய்ய சொல்லி முருகதாசிடம் கூறியும் அவர் பழைய கதைகளையே மேலும் மேலும் கூறியதால் இது ஒத்துவராது என தளபதி விஜய் முடிவெடுத்து தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தளபதி 65 படத்தை இயக்குவார் என்ற கேள்விக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சர்க்கார் படத்தின் போது சன் பிக்சர்ஸ் மற்றும் முருகதாஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனையும் இந்த படத்தில் இருந்து அவரை தூக்கி வீச காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

உண்மையில் இந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலக்கப்பட்டு இருக்கிறாரா என்பது இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் தெரியும்.