மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சோர்வுற்ற விஜயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நேற்றைய தினம் சென்னை நீலாங்கரை பகுதியில் வைத்து தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

மேலும் மாணவர்களுக்கு படிப்பு தான் முக்கியம் படிப்பை தவிர்த்து பார்த்தால் குணமும் நல்ல சிந்தனையும் தான் எஞ்சி இருக்கும். ஒருவன் வாழ்க்கையில் பணத்தை கூட இழக்கலாம் ஆனால் குணத்தை இழக்கக்கூடாது, மேலும் வெளியே செல்லும்போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

இந்நிகழ்ச்சி நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி புகைப்படங்கள் எடுத்து உற்சாகப்படுத்தி வந்த விஜய் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து மேஜை மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். ஆனாலும் அதே புன்னகையுடன் முழு நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்தி முடித்த விஜய்யின் அந்த ஹாட் டச்சிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.