Master
விஜய் 64 படத்தில் தளபதி விஜய் குடிகார மாஸ்டராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், வி.ஜே ரம்யா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பட்டய கிளப்பி வரும் நிலையில் விஜயின் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது இப்படத்தில் விஜய் குடிகார மாஸ்டராக நடித்திருந்தார். அவர் ரவுடியாக வாழ்ந்த பிளாஷ் பேக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் உண்மை என்ன என்பது படம் வெளியானால் தான் தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.