YouTube video

Vijay Birthday Pre-Celebration Starts on Social Media

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திற்காகத்தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனால் ரசிகர்கள் அதனை பிரம்மாண்டமாக கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

நடிகர் முரளியின் தம்பி யார் தெரியுமா? அண்ணனின் உதவி இல்லாமல் சினிமாவில் இடம் பிடித்த வில்லன் தான்!ஆனால் தளபதி விஜய் தன்னுடைய பிறந்தநளை எந்த ஒரு கொண்டாட்டம் வேண்டாம். தற்போதைய சூழலில் அவரவர் அவரவரின் உடல்நிலையைப் பாதுகாத்துக் கொள்வதே சரியான வழி என அறிவுரை வழங்கியிருந்தார்.

இருப்பினும் தளபதி விஜய் ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாடியே தீருவோம் என பர்த்டே காமன் டிபி புகைப்படத்தை பிரபலங்கள் வாயிலாக வெளியிட்டனர்.தளபதி விஜய் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், சாந்தனு, ரத்னகுமார், போஃப்ட்டா தனஞ்செயன், ஹேமா ருக்மணி, இந்துஜா, கதிர் என எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டனர்.


யாருமே எதிர்பார்க்காத விஷயம்.. தளபதி 65 படத்தில் நாயகி இவர் தானா? – வெளியான ஷாக்கிங் அப்டேட்இதனால் தளபதி ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இறங்கினர்.

இதன் காரணமாக ட்விட்டர் சமூக வலைதளமே சற்று மிரண்டு போய் உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.