Vijay Argument in High Court

வரி செலுத்துவதில் பிரச்சனை இல்லை ஆனால் ரோல்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Argument in High Court : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இதற்கான நுழைவு வருகை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வரி என்பது நன்கொடை அல்ல கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் படங்களில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக நடந்துகொள்ளவேண்டும் என கூறி தளபதி விஜய்க்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

வாள் வீச்சில், தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு வந்த அதிர்ச்சி

இதனையடுத்து தளபதி விஜய் தரப்பில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கும் விசாரணைக்கு வந்தது.

விஜய்-அஜித் கூப்பிட்டா கண்டிப்பா நான் பண்ணுவேன்! – Actor Kalaiyarasan Speech | Sarpatta Parambarai

இந்த நிலையில் தளபதி விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள விவாதத்தில் கூறியிருப்பதாவது நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறேன். ஆனால் நீதிமன்றத்தை அணுகியதற்காக அபராதம் விதித்ததையும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களையும் ரத்து செய்ய வேண்டும். மற்ற குடிமக்களை போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது. மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இது போன்ற உத்தவுகளை பிறப்பிக்காத நிலையில் தன்னை மட்டும் விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. புகார்தாரரின் தொழில் பற்றி மனுவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால், ஏன் நடிகர் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்று தனி நீதிபதி கேட்டிருக்கத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.