மீண்டும் அதிரடி கூட்டணி அமைக்க உள்ளார் தளபதி விஜய்.

Vijay And Prabhu Deva Combo in Thalapathy66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை நெல்சன் டிலிப்குமர் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

திருவண்ணாமலையில், 19-ந்தேதி மகாதீப தரிசனம் : பக்தர்களுக்கு அனுமதி?

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நேரடி தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால்பதிக்க உள்ளார் தளபதி விஜய். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தினை வம்சி இயக்குகிறார். தன்னுடைய முதல் நேரடி தெலுங்கு படமான இந்த திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம்.

Jai Bhim Issue: 5 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் – பா.ம.க.வழக்கறிஞர் பாலு ஆவேசம்.! | Suriya | HD

இதனால் இந்தப் படத்தில் முக்கியமான இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவாவை நடனம் அமைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதனால் இந்த கூட்டணி நிச்சயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா நடனம் அமைக்க விஜய் நடனம் ஆடினால் நிச்சயம் அது பெரும் வரவேற்பை பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறி உள்ளது.

விஜய், பிரபுதேவா கூட்டணி தளபதி 66 படத்தில் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.