அதிரடியாக தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Vijay 68 Movie Announcement Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.

வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியானது.

இது குறித்த வீடியோவை தளபதி விஜய் உட்பட பட குழுவினர் வெளியிட ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.