Vijay 63

Vijay 63 Story : தளபதி 63 கதை திருட்டு புகாரில் எழுத்தாளர் சங்கம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது படக்குழுவிற்கு சாதமாகவே அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பொதுவாகவே அட்லீ இயக்கத்தில் உருவாகும் படங்களின் கதைகள் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்று தான்.

தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என குறும்பட இயக்குனர் சிவா என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகார் மனுவை சங்கம் நிராகரித்துள்ளது.

அதற்கான காரணம் சிவா இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து 6 மாத காலம் ஆகவில்லை என்பது தான்.

கதை திருட்டு புகார் அளிப்பவர் எழுத்தாளர் சங்கத்தில் 6 மாதத்திற்கும் அதிகமாக உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தான் சங்கத்தின் விதி என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சிவா அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay 63 Story Issue

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.