விஜயை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தற்போது வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் முரட்டு வில்லனாக மாஸ் காட்டிய நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவரை விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.