Pushpa 2

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்?

‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுமோ? அதாவது, விஷயத்திற்கு வருவோம்..

தடம், மீகாமன், தடையறத் தாக்க போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனியின் இயக்கத்தில், ‘தல’ அஜித்தின் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன், ஆரவ் ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பெரும்பாலான ஷூட் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிலையில், மீதியை பாங்காக்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே ‘அண்மையில் விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியானதன் மூலம், இப்படம் ‘பிரேக்டவுன்’ என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பது உறுதியாகியுள்ளது. அதுதான், தற்போது படக்குழுவுக்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது.

லைகா நிறுவனம் நடிகர் அஜித்தின் கால்ஷீட்டை வாங்கிய உடன் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற அவசரத்தில் பிரேக்டவுன் பட கதையை தேர்வு செய்து, அதை ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. ஆனால் முறைப்படி அனுமதி வாங்கவில்லையாம்.

தற்போது, அப்படத்தின் டீசர் வெளியானதும் அது ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பது ஆங்கிலப் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டதால், அந்த விஷயம் பிரேக்டவுன் படக்குழுவின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. அவர்கள் உடனே விடாமுயற்சி படக்குழுவிடம் ரூ.150 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கதை திருட்டு விவகாரத்தால் ‘விடாமுயற்சி’ பட ரிலீசிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க வட்டாரம் குறிப்பிடுகிறது. எப்படியோ, விடாமுயற்சிக்கு வந்த அயற்சி தீர்ந்தால் தானே, ‘தல’ ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கும்.!

vidaamuyarchi story theft issue breakdown crew demands 150 crores
vidaamuyarchi story theft issue breakdown crew demands 150 crores